அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை விமான நிலையத்தில் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வந்து இறங்கினார். பின்னர், அங்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது, காசா பற்றிய கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். டிரம்பும் ஆர்வமாக பதில் அளித்து கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் செய்தியாளர் ஒருவர் வைத்திருந்த மைக் சட்டென்று டிரம்பின் முகத்தின் வாய் பகுதியில் முட்டியது. இதனால்,சற்று அதிர்ச்சியடைந்த டிரம்ப் சமாளித்தபடி முகத்தை பின்னே இழுத்து கொண்டார். பிறகு, புருவத்தை உயர்த்தியபடி அந்த செய்தியாளரை கொஞ்சம் ஷார்ப்பாக பார்த்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.reporter bumps microphone trump face
பொதுவாக டிரம்ப் செய்தியாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பவர். பத்திரிகையாளர்கள் மக்களின் விரோதிகள், போலி செய்தியை வெளியிடுபவர்கள் என்றும் கூறுவார். மேலும், அசோசியேட் பிரஸ் உள்ளிட்ட சில பத்திரிகை நிறுவனத்தின் செய்தியாளர்களை வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்கவும் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்து இணையத்தில் பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிரம்ப் விரைவில் கொல்லப்படலாம் என்று ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. reporter bumps microphone trump face
இந்த சம்பவம் ஒரு படத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்தியது. அந்த காமெடியில் வாய்க்குள் சென்ற மைக் கவரை திருப்பி தரும்படி செய்தியாளர் ஒருவர் வடிவேலுவிடம் கேட்பார். அது வாய்க்குள்ளையா இருக்குது? என்று கேட்டபடி வடிவேலுவும் எடுத்து கொடுப்பார். இந்த காட்சிதான் நினைவுக்கு வந்து போனது.