சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது அண்ணா மேம்பாலம்.
1970 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை சாலை, ஜி.என்.ஷெட்டி சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
அந்த நெரிசலை நீக்கி அப்பகுதியில் சீரான சாலைப் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது.
அந்நாளில் 66 இலட்சம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட அந்த மேம்பாலம் கலைஞரால் 1973 ஜூலை 1 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா காணும் நிலையில் அதனைப் புதுப்பித்திட 10 கோடியே 85 லட்சம் ரூபாய்ச் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட பாலத்தின் தூண்கள் GRC பேனல்கள் கொண்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
பாலத்தின் கீழ் அழகூட்டும் வகையில் பசுமையான செடிகள் ஒளிரும் மின்விளக்குகள், மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை, செயற்கை நீருற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
பாலத்தின் முகப்பில் உள்ள தூண்கள், பூங்கா பகுதியில் யாழி சிற்பங்கள், முக்கோண ஸ்தூபிகள், பித்தளைப் பலகையில் அண்ணாவின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
பொன்விழா ஆண்டை முன்னிட்டு புனரமைக்கப்பட்டுள்ள அண்ணா மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 2) மாலை தொடங்கிவைத்தார்.
பிரியா
வேலைவாய்ப்பு : வங்கிகளில் பணி – ஐபிபிஎஸ் அறிவிப்பு!
டிஜிட்டல் திண்ணை: புதிய மேயர்கள் யார்? ஸ்டாலின் போடும் கணக்கு!