ரெண்டகம்- சினிமா விமர்சனம்!

Published On:

| By Aara

ஆகஸ்ட் சினிமா சார்பில் சினிஹோலிக்ஸ் தயாரித்திருக்கும் ரெண்டகம்.  படத்தை பெல்லினி இயக்கியுள்ளார். காஷிப் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழில் ‘ரெண்டகம்’ என்று நேற்று தமிழ்நாட்டில் வெளியான இப்படம், மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற படமாக செப்டம்பர் 8ம் தேதியே வெளியானது. 

பெல்லினி இயக்கியுள்ள இந்தப் படமும் மும்பையை கதைக்களமாகக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் படம்தான். இருந்தாலும் அதை அவர் திரைக்கதை அமைத்துக் கொடுத்துள்ள விதம்தான் சுவாரசியமானது. பால் குடித்த வீட்டுக்கு பாதகம் செய்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.  வேலையில்லாமல் சுற்றித் திரியும் கிச்சுவுக்கு தனது காதலி கல்யாணியுடன் சேர்ந்து இந்தியாவை  விட்டு வெளியேறி நார்வே சென்று நிரந்தரமாக தங்கிவிட வேண்டும் என ஆசை. 

ADVERTISEMENT

தன் கனவை நிறைவேற்ற போதிய பணமில்லாமல் தவிக்கும் அவரிடம்…  ஒரு விபத்தில் சிக்கி எல்லாவற்றையும் மறந்துபோன தாவூத் என்பவரிடம் பழகி நட்பாகி அவரின் நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்கிற வேலையை கொடுக்கிறது ஒரு மர்ம கும்பல்.

பணத் தேவைக்காக அந்த வேலையை, ஒப்புக்கொண்டு தாவூத்துடன்  பழக ஆரம்பிக்கும் கிச்சு, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக முடித்தாரா, தாவூத்துக்கு நினைவு திரும்பியதா என்பதோடு மட்டுமல்லாமல், அந்த வேலையை செய்கிறபோது அவர் வாழ்க்கையில் நிகழும் திருப்பங்களின் தொகுப்புதான் ரெண்டகம் படம்.

ADVERTISEMENT

மலையாளத்தில் பல படங்களில் முத்திரை பதித்த குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்திருக்கும் முதல் தமிழ்ப் படம். 

மும்பையில் பெரிய தாதாவாக இருந்தவரின் வலது கரமாக செயல்பட்டவர் அரவிந்த்சாமி. தங்கக் கடத்தல் ஒன்று நடந்த போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனது நினைவுகளை இழந்தவர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்கத்தைப் பற்றிய தகவல்களை அவரிடமிருந்து எப்படியாவது பெற வேண்டும் என பயணிக்கின்ற திரைக்கதை என்று படம் பார்ப்பவர்களை அதிரவைக்கிறது அடுத்தடுத்து நடக்கும்
திருப்பங்கள்.

ADVERTISEMENT

நரைத்த முடி, தோற்றத்துக்கு பொருத்தமில்லாத ஜிப்பாவுடன் மலையாள ஸ்டைலில் வேட்டியை கட்டிக் கொண்டுநினைவுகளை இழந்த கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்தவராக அரவிந்த்சாமி. அமைதியாக, சாந்தமாக, அப்பாவியாக படத்தில் அறிமுகமாகிறார். அதிர்ந்து கூட பேசாமல் இருக்கிறார். அவர் மீது நமக்கும் அனுதாபம் வரும் அளவிற்கு நடிக்கிறார். கடைசியில் அவர் யார் என்று தெரிய வரும் போதும், அதன் பின் அவருடைய நடவடிக்கைகளும் படம் பார்க்கும் பார்வையாளர்களை அதிர வைக்கிறது. 

பாசஞ்சர் ரயில் வேகத்தில் மெதுவாக நகரும் படம் இடைவேளைக்கு பின் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்கிறது.   இறுதிக் காட்சியை நெருங்கும்போது, படம் மொத்தமாக பல்வேறு திருப்பங்களுடன் பயணிப்பது படத்தின் தரத்தை உயர்த்துகிறது.  சண்டைக் காட்சிகளுக்கு ஏ.ஹெச்.காஷீஃப்பின் பின்னணி இசை தனது முழு திறனையும் வழங்கி படத்திற்கு வலுசேர்க்கிறது.

கிரியேட்டிவ் ஷாட்ஸ், கோவா – மங்களூர் சாலைப் பயணம் ஹைவே ஷாட்ஸ், சண்டைக் காட்சிகள் என கௌதம் ஷங்கரின் கேமரா நம்மை ஏமாற்றவில்லை.  படத்தை நீட்டி முழக்காமல் கதைக்கு என்ன தேவையோ அதனை சமரசமின்றி கச்சிதமாக வெட்டி தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அப்பு.

வரிசைப்படி பாகங்களாக படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் இந்திய சினிமாவில் படத்தின் முந்தைய கதையையும் சொல்லாமல், பிந்தைய கதையையும் சொல்லாமல் மூன்று பாகங்களைக் கொண்ட இந்தப் படத்தில், கதையின் நடுப் பகுதியே ரெண்டகம் திரைப்படமாக தற்போது வெளி வந்துள்ளது.

இந்த கதைக்கு முற்பட்ட காலத்தில் நடக்கும் கதையும், தற்போதைய கால கட்டத்திற்கான தொடர்ச்சியும் அடுத்தடுத்த பாகங்களாக இனிமேல்தான் எடுக்கப் போகிறார்களாம்.   நடுப்பகுதி என்றாலும் அதனையும் படம் பார்க்கும் பார்வையாளனுக்கு தனிப்படமாக ரசிக்ககூடிய அனுபவத்தை கொடுக்கிறது ரெண்டகம்.

இராமானுஜம்

முதல்வரை சந்தித்த சினிமா தயாரிப்பாளர்கள் : ஏன்?

தமிழ் சினிமாவில் திரைக்கதை தட்டுப்பாடா?

Photo of author
Aara
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share