97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

Published On:

| By Kavi

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரைக் காட்டிலும் தமிழகத்தில் கூடுதலாக 30 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கின்றனர்.

ADVERTISEMENT

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நாளை மாலை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (டிசம்பர் 20) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

ADVERTISEMENT

அதுபோது, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அதில்,வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக இக்கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share