சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் போன்ற பல நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் அசோக் செல்வன்.
தற்போது இவரது நடிப்பில் அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சபா நாயகன். இந்த படத்தில் அசோக் செல்வனுடன் நடிகர்கள் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி செளத்ரி, பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் சபா நாயகன் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படமும் வரும் டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் வெளியிட்டுள்ள பதிவில், ”மை டியர் மக்களே, மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சபா நாயகன் படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகாது. அதற்கு பதிலாக டிசம்பர் 22ம் தேதி ரிலீஸாகும். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
My Dear Makkalay, due to the cyclone flood which led to postproduction and certification delay, #SabaNayagan has been pushed to the 22nd this month. See you in the theatres soon ❤️ #SabaNayaganOnDec22nd pic.twitter.com/pKXWyVniES
— Ashok Selvan (@AshokSelvan) December 12, 2023
சபா நாயகன் படத்தை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வனுக்கு ப்ளூ ஸ்டார் படமும் ரிலீஸுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
டிசம்பர் மாத இறுதிக்குள் செய்ய வேண்டிய 3 முக்கிய அப்டேட்டுகள்!
மக்களவையில் நுழைந்த இருவர் : எம்.பி.க்கள் மீது வண்ண புகை குண்டு வீச்சு!
