புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவது, பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். refusal to accept the new education policy
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று (பிப்ரவரி 22) கடிதம் எழுதினார்.
குறுகிய பார்வையுடன் அரசியல் லாபத்திற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் புதிய கல்விக் கொள்கையை மறுக்க கூடாது என்று தர்மேந்திர பிரதான் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
தர்மேந்திர பிரதான் கடிதம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசு பி.எம்ஸ்ரீ திட்டம் மூலம் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதை நாங்கள் அறிந்து கொண்டோம். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவது, பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும் வகையிலான திட்டங்கள் இருப்பதை சுட்டிக்காட்டினோம். தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் இந்த ஆட்சி பொறுப்பேற்ற போது 16 சதவீதம் இருந்த பள்ளி இடை நிற்றலை தற்போது 5% குறைத்துள்ளோம்.
இருமொழிக் கொள்கையில் படித்த தமிழக மாணவர்கள் பல சாதனைகளை புரிந்து தமிழக கல்வியின் தரம் சிறந்தது என்பதை நிரூபித்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கும் பொழுது எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல் அவர்களாகவே வரையறுத்துவிட்டு தற்பொழுது அதை நம் மீது திணிக்கிறார்கள்.
ஒன்றிய அமைச்சரின் கடிதம் தூண்டிலை போட்டுவிட்டு அதில் மீன் சிக்காதா என்பது போல் தான் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான காரணங்களாக பாரம்பரிய மொழிக்கான அர்ப்பணிப்பு, இரு மொழிக் கொள்கை கல்வியின் வெற்றி, மொழி திணிப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 காரணங்கள் உள்ளன.
அனைத்து தலைவர்களும் எதிர்ப்பு! refusal to accept the new education policy
மும்மொழிக் கொள்கையை அண்ணா, கலைஞர், எம்ஜி ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரும் எதிர்த்துள்ளனர். வெவ்வேறு அரசியல் கட்சிகளாக இருந்தாலும் வெவ்வேறு கொள்கைகளை பின்பற்றி கொண்டிருந்தாலும் தமிழகத்தை சேர்ந்த ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது. அந்த நிலை நம் தமிழ் மொழிக்கும் வந்து விடக்கூடாது. எந்த நிலையிலும் நாங்கள் அவர்களின் திட்டத்திற்கு பலியாக மாட்டோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழ்நாட்டு வரலாற்றை அவர்கள் மாற்றி விடுவார்கள்.
கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் வெறும் காகிதம் அல்ல அது 43 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு பிளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். பி எம் ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஏற்கனவே தமிழக அரசு ஒத்துக் கொண்டதாக அவர்கள் கூறுகிறார்கள் அது தவறு” என்று கூறினார். refusal to accept the new education policy