உடல் எடை குறைக்க (Reduce Belly Fat) நினைப்பவர்கள் தினமும் காலை எலுமிச்சை கலந்த வெந்நீரை குடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், பாஸ்ட் புட் காரணமாக உடல் எடை அதிகரித்துவிடுகிறது. உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். குறிப்பாக தொப்பையை வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்பைக் (Belly fat) குறைக்க பலரும் முயற்சிக்கின்றனர். இதற்காக கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்கிறார்கள்.
நம் சமையலறையில் எளிதில் கிடைக்கக்கூடிய சில பொருட்களும் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவிபுரிகிறது. அதில் எலுமிச்சையும் ஒன்றாகும். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு (Benefits of lemon) கலந்த வெந்நீரைக் குடிப்பதால், உடல் நீரேற்றத்துடன் இருப்பது மட்டுமல்லாமல், உடல் எடை குறைக்கும் முயற்சிகளுக்கும் துணைபுரிகிறது.
எலுமிச்சையில் உள்ள சத்துக்கள்
எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சீரான செரிமானத்தைப் (Nutrients in lemon) பராமரிக்கவும் உதவுகின்றன. தினமும் காலையில் அரை எலுமிச்சையின் சாற்றை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடிப்பதால், வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறுகிய காலத்தில் குறைக்க முடியும்.
எவ்வளவு முறை எலுமிச்சை நீர் குடிக்கலாம்?
கோடைக்காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, காலையில் வெறும் வயிற்றில் அரை எலுமிச்சையின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை கூட வெறும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். சர்க்கரைக்கு பதிலாக சிறிதளவு தேன் (Honey Lemon) சேர்ப்பதன் மூலம் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
பசியை கட்டுப்படுத்த உதவுகிறது
எலுமிச்சை சாறு கலந்த வெந்நீரைக் குடிப்பதால் உடலின் கொழுப்பை எரிக்கும் செயல்முறை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து (Fiber) பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது அதிகமாகச் சாப்பிடும் ஆசையைக் குறைத்து, தினசரி கலோரி நுகர்வையும் குறைக்கக்கூடும். அதேபோல எலுமிச்சை நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது சிறந்த வளர்சிதை மாற்றம் என்பது, உடலால் அதிக கலோரிகளை எரிக்க முடியும் என்பதாகும். இது வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.
கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது
எலுமிச்சை தண்ணீர் அருந்துவது உடலில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவது (Improving digestion) மட்டுமின்றி, வயிற்றை இலகுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும், இது தசை ஆரோக்கியத்தையும் மேம்படுத்த துணை புரிகிறது.
சமச்சீரான உணவு, உடற்பயிற்சியும் அவசியம்
எலுமிச்சை நீரை மட்டும் குடிப்பதால் உடல் எடையைக் குறைக்கவோ அல்லது தொப்பைக் கொழுப்பை முழுமையாகக் கரைக்கவோ முடியாது என்பது மிகவும் அவசியம். சமச்சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி (Exercise) மற்றும் கலோரி கட்டுப்பாடு ஆகியவையும் அவசியமானவை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே உடல் எடை குறைப்பில் நல்ல பலன்களைக் காண முடியும்.
