தமிழகத்தில் நவ.29, நவ.30-ல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு- ‘ரெட் அலர்ட்’

By Mathi

|

Published on 27 Nov 2025, 7:58 AM

Weather Report warning

தமிழகத்தில் நவம்பர் 29 மற்றும் நவம்பர் 30 ஆகிய இரு நாட்களில் ஓரிரு இடங்களில் மிக அதிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நவம்பர் 28-ந் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 12 செமீ முதல் 20 செமீ வரை மழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் நவம்பர் 29, 30 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் 21 செ.மீக்கும் மிக அதிகமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதால் அந்த 2 நாட்கள் மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நவம்பர் 29-ந் தேதியன்று தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை,
செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்; ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 30-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel