RED ALERT: நீலகிரிக்கு மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட்- இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

Published On:

| By Minnambalam Desk

Nilgiri Red Alert Schools leave

நீலகிரி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 5-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஆகஸ்ட் 5-ந் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்; திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றூம் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 5-ந் தேதி செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் 05.08.2025 அன்று நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை (Red alert) பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக அளவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண்சரிவு, மரங்கள், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

எனவே, பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் 05.08.2025 ஒரு நாள் (இன்று) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 05.08.2025 ஒரு நாள் மட்டும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும்.

ADVERTISEMENT

தொடர்பு எண்கள்

மேலும், மழை மற்றும் இயற்கை இடர்களால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், WhatsApp எண் 9488700588 -க்கு தகவல் அளிக்கலாம். இவ்வாறு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

  • உதகை கோட்டத்திற்கு: 0423-2445577
  • குன்னூர் கோட்டத்திற்கு: 0423-2206002
  • கூடலூர் கோட்டத்திற்கு: 04262-261296
  • உதகை வட்டத்திற்கு: 0423-2442433
  • குன்னூர் வட்டத்திற்கு: 0423-2206102
  • கோத்தகிரி வட்டத்திற்கு: 04266-271718
  • குந்தா வட்டத்திற்கு: 0423-2508123
  • கூடலூர் வட்டத்திற்கு: 04262-261252
  • பந்தலூர் வட்டத்திற்கு: 04262-220734

ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share