தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 3644 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்:
2ம் நிலை காவலர்கள் (Gr. II Police Constables (TSP) – 2833
2-ம் நிலை சிறை காவலர் (Gr. II Jail Warders) 142
தீயணைப்பாளர் (Firemen) 631
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையானது
வயது வரம்பு: 01.07.2025-ன் படி 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்; 26 வயது நிறைவடையாதவராக இருக்க வேண்டும்
இணையவழி விண்ணப்பம் துவங்கும் தேவை: 21.08.2025
விண்ணபிக்க கடைசி நாள்: 21.09.2025
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 09.11.2025
ஊதிய விகிதம்: ரூ18,200 – ரூ67,100
விண்ணப்பிக்க: https://www.tnusrb.tn.gov.in/
10% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு:
காவல், சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மொத்த காலிப்பணியிடங்களில் 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்.விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் இத்தேர்விற்கு விளம்பரம் வெளியிட்ட தேதிக்கு முன்னர் 5 ஆண்டுகளுக்குள் கலந்துகொண்டு பெற்ற விளையாட்டுப் படிவம் – I / படிவம் – II / படிவம் – III-ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அல்லது தமிழ்நாடு ஒலிம்பிக் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையம் அல்லது தமிழக பல்கலைக்கழகம் சார்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளின் மூலம் கலந்து கொண்டு பெற்றிருத்தல் வேண்டும்.

இணையவழி விண்ணப்பத்தை எளிதாக நிரப்ப பின்வரும் ஆவணங்களை (பொருந்துவது மட்டும்) தயாராக வைத்திருக்கவும்.
- 10-ஆம் வகுப்பு / SSLC மதிப்பெண் சான்றிதழ்
- சாதி சான்றிதழ்
- ஆதரவற்ற விதவைச்சான்றிதழ்
- முன்னாள் ராணுவவீரர் சான்றிதழ்
- NCC சான்றிதழ்
- NSS சான்றிதழ்
- விளையாட்டுச்சான்றிதழ்
- PSTM சான்றிதழ்
- திருநங்கைச்சான்றிதழ்
