சாதனை படைத்த ஆகஸ்ட்: சென்னை மெட்ரோ ரயில்களில் 99.09 லட்சம் பேர் பயணம்!

Published On:

| By Mathi

Chennai Metro Rail

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 99.09 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளதாவது: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும், மேமாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும், ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 14.08.2025 அன்று 4,09,590 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2025 – சென்னை மெட்ரோ மாதாந்திர பயணிகள்

மாதம்பயணிகள் எண்ணிக்கை
ஜனவரி86,99,344
பிப்ரவரி86,65,803
மார்ச்92,10,069
ஏப்ரல்87,89,587
மே89,09,724
ஜூன்92,19,925
ஜூலை1,03,78,835
ஆகஸ்ட்99,09,632
ஆகஸ்ட் 14-ந் தேதி (அதிகபட்சம்)4,09,590

பயணிகள் விவரம்

2025, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 48,71,627 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 2,24,246 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48,13,759 பயணிகள் (Single journey Paper QR /Token 21,74,413; Static QR 3,10,521; Whatsapp – 6,12,757; Paytm 4,28,846; ONDC – 7,58,871; PhonePe – 3,45,562; CMRL Mobile App 1,82,789) பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 2025 – பயண முறைகள்

பயணச்சீட்டுபயணிகள்
சிங்கார சென்னை அட்டை48,71,627
Travel Card2,24,246
QR Code மொத்தம்48,13,759
Paper QR/Token21,74,413
Static QR3,10,521
WhatsApp6,12,757
Paytm4,28,846
ONDC7,58,871
PhonePe3,45,562
CMRL App1,82,789

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp – (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.

மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share