“யாராவது பசியே இல்லாமல் உணர்ந்தாலோ, எடை குறைவதாக உணர்ந்தாலோ அதை அலட்சியப்படுத்தவே கூடாது.
ஏனென்றால் அவை ஆபத்தின் அறிகுறிகளாக இருக்கக்கூடும்” என்கிறார்கள் குடல்நல மருத்துவர்கள்.
வயிற்றில் ஏற்படும் ஆபத்தானது பெரிதாக அறிகுறிகளைக் காட்டாது. ஆனால், உணவை விழுங்குவதில் சிக்கல் ஏற்பட்டு விழுங்கும்போது வலியை ஏற்படுத்தும். பசி உணர்வை ஏற்படுத்தாது.
புகைபிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல், புகையிலை மெல்லுதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை, காற்று மாசு ஆகியவை உணவுக்குழாய் ஆபத்துக்கான காரணங்கள் என்று அறியப்பட்டாலும்,
தற்போதைய சூழ்நிலையில் துரித உணவுகள், பொரித்த உணவுகள், நார்ச்சத்து இல்லாத உணவுகள், நேரம் தவறி சாப்பிடும் அசைவ உணவு முறையால் உடல் பருமன் ஏற்பட்டு இளைஞர்களும் உணவுக்குழாயால் பாதிக்கப்படுகிறார்கள். பசி உணர்வே இல்லாமல் இருக்கிறார்கள்.
“உணவை விழுங்குவதில் சிரமம், பசியின்மை, எடை இழப்பு, மார்புப் பகுதியில் கடுமையான வலி, அஜீரணம், நாள்பட்ட இருமல் இருந்தால், நீங்கள் உங்கள் பிரச்சினைகளுக்கான காரணத்தைக் கண்டறிய முதலில் மருத்துவரை அணுகுங்கள்.
பெரிய ஆபத்தாக இருக்குமோ என நீங்களாக பயந்து கொண்டிருக்கவும் தேவையில்லை… அப்படியெல்லாம் இருக்காது என்ற அலட்சியமும் வேண்டாம்.
நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நேரத்தை ஒதுக்கிச் செயல்படுகிறோம்.
உதாரணத்துக்கு, வேலைக்குச் செல்பவர்கள் வேலை நேரத்துக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கேற்ப சென்று சேர்கிறோம்.
வேலை முடிந்ததும் வீட்டுக்குத் திரும்புகிறோம். நமக்கு விருப்பப்பட்டதைச் செய்கிறோம். ஆனால், இந்த உழைப்புக்கான ஆற்றலைத் தரும் உணவு விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறோம்.
குறிப்பிட்ட நேரத்தில் பலர் சாப்பிடுவதில்லை. இதனால் ஏற்படும் பிரச்சினைகளால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரை சென்று முடியும்.
இதயம் எப்படி இடைவிடாமல் செயல்படுகிறதோ… அப்படித்தான் நம் செரிமான மண்டலமும் செயல்படுகிறது.
எனவே, உங்கள் உணவுப் பழக்கத்தை சீராக்கிக் கொண்டு குடல்நலத்தைப் பேணுங்கள்… ஆரோக்கியமாக வாழுங்கள்” என்கிறார்கள் குடல்நல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பீட்ரூட் சட்னி
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: அவிட்டம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: திருவோணம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மூலம்!
‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற சிறப்பு அகாடமி : குகேஷ் பாராட்டு விழாவில் குட் நியூஸ் சொன்ன ஸ்டாலின்
ஒபிசிக்கு மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் பாகுபாடு காட்டுகிறீர்கள்? – ராஜ்யசபாவில் அன்புமணி கேள்வி!