பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக மீண்டும் பைனலில் காலடி எடுத்து வைத்துள்ளது பெங்களூரு அணி. RCB thrash pbks and move into 2025 IPL final
ஐபிஎல் தொடரின் 18வது சீசனின் முதல் குவாலிபயர் போட்டி முல்லன்பூரில் இன்று நடைபெற்றது. இதில் லீக் போட்டிகளின் முடிவில் தலா 9 வெற்றிகளுடன் முதல் இரண்டு இடித்த பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியும் மோதின.

டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணி தரப்பில் ஸ்டோய்னிஸ் (26) மட்டுமே 20 ரன்களை தாண்டினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். இது ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றி ஒரு அணி குவித்த நான்காவது குறைந்தபட்ச ஸ்கோராக பதிவானது.

பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் தலா 3 விக்கெட்டுகளும், யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 102 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட் செய்ய தொடங்கிய ஆர்.சி.பி அணியில் விராட் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் மற்றொரு துவக்க வீரரான பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார்.

10வது ஓவரின் கடைசி பந்தை கேப்டன் படிதார் சிக்ஸருக்கு விரட்டி அணியை நான்காவது முறையாக பைனலுக்கு அழைத்துச் சென்றார்.
முன்னதாக பெங்களூரு அணி 2009, 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
முக்கியமான போட்டியில் மூன்று ஓவர்கள் வீசி 17 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுயாஷ் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
