ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இன்று (மார்ச் 22) வெற்றி பெற்றது.
2025-ஆம் ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று (மார்ச் 22) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. RCB beat KKR ipl
முதல் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா அணி தரப்பில் டி காக், நரேன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டி காக் 4 ரன்களில் நடையை கட்ட, அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரஹானே, நரேன் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அணியின் ரன் உயரத்தொடங்கியது.
ரஹானே 56 ரன்களுடன், நரேன் 44 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ரகுவன்ஷி மட்டும் 30 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 174 ரன்கள் எடுத்திருந்தது.
பெங்களூரு அணியில் க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தனர்.

இதனால் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியில் பிலிப் சால்ட், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்திலேயே இருவரும் பந்துகளை பறக்கவிட்டனர். இதனால் மளமளவென பெங்களூரு அணி ரன்கள் எகிறியது.
விராட் கோலி 59 ரன்களுடனும், பிலிப் சால்ட் 56 ரன்களுடனும் வெளியேறினர். இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த படிக்கல், ராஜத் பட்டிதார் ஜோடி டார்கெட்டை நோக்கி மெதுவான ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதனையடுத்து 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது பெங்களூரு.