வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்… நிவாரணம் அறிவித்த ஆர்சிபி!

Published On:

| By Selvam

rcb announced relief 10 lakhs

நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில், பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்தநிலையில், பெங்களூருவில் நேற்று (ஜூன் 4) வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. rcb announced relief 10 lakhs

ADVERTISEMENT

இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பெங்களூரு அணி நிர்வாகம் இன்று (ஜூன் 5) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பெங்களூரு அணி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “பெங்களூருவில் நேற்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆர்சிபி குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மேலும், கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

எங்கள் ரசிகர்கள் எப்போதும் எங்களுடன் உடனிருப்பார்கள். துக்கத்தில் அவர்களுடன் நாங்கள் உடன் நிற்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசின் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்கும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share