இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த ஆண்டு (2024 – 25) மத்திய அரசுக்கு ரூ.2,68,590 கோடி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் (2023 – 24) ஒப்பிடும்போது 27% அதிகம்.
ரிசர்வ் வங்கிக்கு உபரி லாபம் வந்ததற்கான காரணங்களாக அமைவது:
டாலர் விற்றதில் இருந்து லாபம்!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளிநாட்டு நாணயங்கள் (foreign currency) முக்கியமாக அமெரிக்க டாலர்கள் பெரிதும் வைத்திருக்கும். இதை இந்தியாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு வர்த்தகங்களுக்கு தேவைப்படும். RBI to pay Rs 2.69 lakh crore to government

எப்படி லாபம் ஏற்படுகிறது?
RBI குறைந்த விலையில் டாலர் வாங்கி வைத்திருக்கும். பின்னர், டாலரின் விலை அதிகரிக்கும் போது அதை விற்கும். இப்போது, விற்றதிலிருந்து உள்ள விலை வித்தியாசம் லாபமாக வரும்.
உதாரணமாக, RBI ஒரு டாலரை ₹80-க்கு வாங்கியது எனக் கூறிக்கொள்ளலாம். அதை ₹84-க்கு விற்கும் போது, ஒரு டாலருக்கு ₹4 லாபம் வரும். பல ஆயிரம் கோடி டாலர்களைப் விற்றால், இந்த லாபம் மிக பெரியதாக இருக்கும்.
வெளிநாட்டு முதலீடுகளில் இருந்து வருமானம்!
RBI இந்தியாவின் அன்னிய செலவாணியாக டாலர், யூரோ, பவுண்ட் போன்ற வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கும். இந்த நாணயங்களை வைத்து, அது வெளிநாட்டில் மூலதனமாக முதலீடு செய்கிறது.
எந்தவகை முதலீடுகள்?
அமெரிக்க அரசு பத்திரங்கள் (US government bonds). உலகின் மிகச் சுருக்கமான, பாதுகாப்பான பங்குகள். அந்நிய நாணய அடிப்படையிலான வட்டி தரும் சேமிப்புகள்.
இந்த முதலீடுகள் மீதான வட்டியும், அவற்றை விற்றபோது வரும் விலை அதிகரிப்பு (capital gain)
இதிலிருந்து வருமானம் கிடைக்கிறது.
உதாரணமாக, RBI ஒரு அமெரிக்க பத்திரத்தை வாங்குகிறது என்றால், அதில் ஆண்டுக்கு 3% வட்டி தரும் பத்திரம் எனக் கூறலாம்.
வருடத்திற்கு அந்த பத்திரத்தில் இருந்து வட்டி வரும் இது வருமானமாக சேரும். பத்திர விலை அதிகரித்து விற்றால், கூடுதல் லாபமும் வரும்.
இந்த வருமானம், இந்திய ரிசர்வ் வங்கிக்கு நிதி ஆதாரமாக இருக்கும். இதன் மூலம் தான் மத்திய அரசுக்கு லாபம் (dividend) வழங்க முடிகிறது.
வங்கிகளுக்கு பணம் வழங்கியதில் கிடைத்த வருவாய்!
வங்கிகளுக்கு சில நேரங்களில் திடீரென பணம் தேவைப்படும். உதாரணமாக, வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்க, தினசரி பண நடவடிக்கைகள் செய்ய. அப்பொழுது, வங்கிகள் RBI-யிடம் குறுகிய காலத்திற்கு பணம் கடன் வாங்கும்.
RBI இது போன்ற பணம் வழங்கும் முறையை “Repo Auctions” அல்லது “Variable Rate Repo” (VRR) என்று அழைக்கிறது.
இதில் வங்கிகள், சில தினங்களுக்கு RBI-யிடம் இருந்து பணம் கடன் வாங்குகின்றன. இதற்கு வட்டி கட்ட வேண்டும்.
வங்கிகள் வாங்கும் பணத்திற்கு RBI வட்டி வசூலிக்கிறது. வட்டி தான் RBI-க்கு வருமானமாக வரும். வங்கிகள் அதிகமாக பணம் கேட்டால், RBI-க்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
ஒரு வங்கி, RBI-யிடம் இருந்து ₹10,000 கோடி கடன் வாங்குகிறது என்றால் அதற்கு 6.5% வட்டி வங்கிகளுக்கு விதிக்கப்படுகிறது.

ஒரு வருடத்தில் அதற்காக ரூ.650 கோடி வட்டி கட்ட வேண்டும். இதே போல பல வங்கிகள் வாங்கினால், மொத்தமாக பெரிய வருமானம் RBI-க்கு வரும்.
மத்திய அரசு 2025-26 பட்ஜெட்டில் RBI மற்றும் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் இருந்து மொத்தமாக ரூ.2.56 லட்சம் கோடி பெறுவதாக கணித்திருந்தது.
ஆனால் வர்த்தக நிபுணர்கள் இந்த தொகை ரூ.2.50 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்த்திருந்தனர்.
இதே நேரத்தில், RBI தன்னுடைய பாதுகாப்பு நிதியை (Contingent Risk Buffer) கடந்த ஆண்டின் 6.5% இல் இருந்து இந்த ஆண்டு 7.5% ஆக உயர்த்தியுள்ளது.
இது தேவையான சந்தை மற்றும் பொருளாதார நிலைகளை எதிர்கொள்ள பாதுகாப்பு நிதியாக வைக்கப்படும் தொகை. இந்த உயர்வினால் மத்திய அரசுக்கு வழங்கப்படும் நிகர தொகை சற்றே குறைந்துள்ளது.
இல்லையெனில், இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் தர முடிந்திருக்குமென பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடந்த 13 நிதி ஆண்டுகளில் RBI-யால் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட தொகை (₹ கோடியில்)
2012–13 | 33,110 |
2013–14 | 52,679 |
2014–15 | 65,896 |
2015–16 | 65,876 |
2016–17 | 30,659 |
2017–18 | 50,000 |
2018–19 | 1,76,051 |
2019–20 | 57,128 |
2020–21 | 99,122 |
2021–22 | 30,307 |
2022–23 | 87,416 |
2023–24 | 2,10,874 |
2024–25 | 2,68,590 |