பேடிஎம் : புதிய தடை!

Published On:

| By admin

இணையவழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் சேவையைத் தனியார் நிறுவனங்கள் முதல் டீ கடைகள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பேடிஎம் நிறுவனம் தனது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பணப் பரிவர்த்தனை விதிகளை முறையாகப் பின்பற்றாததால் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோன்று, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் தணிக்கை செய்யுமாறு வருமான வரித்துறைக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வருமான வரித்துறை தணிக்கை செய்து அறிக்கை கொடுத்த பிறகு, ரிசர்வ் வங்கி அதன் முடிவை மறுபரிசீலனை செய்யும் என்றும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share