என்னது ரூ.500 நோட்டு செல்லாது என அறிவிக்கப் போறாங்களா? உண்மை என்ன?

Published On:

| By Minnambalam Desk

Rs 500 RBI

நாட்டில் தற்போது அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் ரூ.500 நோட்டு செல்லாது என அறிவிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல என மறுத்துள்ளது மத்திய அரசு. RBI Clarifies Rs. 500 Notes Remain Valid

ரிசர்வ் வங்கியானது அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், நாடு முழுவதும் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் அதிகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுறுத்தலால், ரூ.500 நோட்டு செல்லாது என அறிவிக்கப் போகிறார்களா? என்ற குழப்பம் எழுந்தது. ஏற்கனவே ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுவிட்ட நிலையில் பொதுமக்களிடையே ரூ.500 நோட்டு குறித்த குழப்பம் அதிகரித்தது.

இதனையடுத்து ரிசர்வ் வங்கியானது, ஏடிஎம்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் அதிகமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; இப்படி குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதால் மக்கள் பயன்பாட்டுக்கும் எளிதாக இருக்கும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது.

ADVERTISEMENT

மத்திய அரசும் டிவி சேனல்களில் வெளியான இது தொடர்பான செய்திகளில் உண்மை இல்லை என மறுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share