நகையை அடகு வைக்க போகிறீர்களா…ஆர்பிஐ-யின் புதிய விதிகள்!

Published On:

| By Kavi

 rbi 9 new rules for gold loan

நகைகளை அடகு வைப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி  ஒன்பது புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. rbi 9 new rules for gold loan

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் நகையை அடகு வைக்கவும் புது புது கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து வருகிறது. 

இந்த சூழலில் தற்போது புதிய விதிமுறைகளை முன்வைத்துள்ளது.

அதன்படி, அடமானம் வைக்கும் தங்க நகையின் மதிப்பில்  (LTV value) 75% தான் அடகு வைப்பவர்களுக்கு கிடைக்கும். அதாவது தங்கத்தின் மதிப்பு 10,000 ரூபாய் என்றால் 7,500 ரூபாய் தான் கடனாக கிடைக்கும். 

நகையை அடகு வைப்பவர்கள் அந்த நகைக்கான உரிமை சான்றிதழை வங்கியிடமோ அல்லது கடன் பெறும் நிதி நிறுவனத்திலோ  சமர்ப்பிக்க வேண்டும்.

தங்கத்தின் தூய்மை குறித்து கடன் வழங்குபவருக்கும் கடன் வாங்குபவருக்கும் இடையே தெளிவு இருப்பதை உறுதி செய்யும் வகையில், கடன் வழங்குபவர் அடமானம் வைக்கப்படும் நகையின் தரம் குறித்தான சான்றிதழ்களை வங்கி அல்லது நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். இதில் ஒரு நகல் வங்கியும், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனமும் வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழில் கடன் கொடுப்பவர் மற்றும் கடன் வாங்குபவர் என இருவரது கையொப்பமும் இடம்பெற்று இருக்க வேண்டும். 

குறிப்பிட்ட தங்க நகைகளுக்கு மட்டுமே நகை கடன் வழங்க வேண்டும். அந்த நகையின் தரம் 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். 

இனி வெள்ளி பொருட்களுக்கும் நகை கடன் வழங்கப்படும். 

அந்த வகையில் தனிநபர் ஒருவர் ஒரு கிலோ வெள்ளி மட்டுமே அடகு வைக்க முடியும். 

நகை கடன் இனி 22 கேரட் நகையின் மதிப்பு அடிப்படையிலேயே வழங்கப்படும். 

கடன் பெற்றவர்கள் அந்த தொகையை திருப்பி செலுத்திய பிறகு 7 நாட்களுக்குள் நகையை திருப்பி தர வேண்டும். இல்லையென்றால் கடன் வழங்குபவர் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 5000 ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும்  உள்ளிட்ட விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. 

ஏற்கனவே, நகை கடன் பெற்றவர்கள் மறு அடமானம் வைக்கும் முறையில் ரிசர்வ் வங்கி திருத்தம் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. rbi 9 new rules for gold loan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share