வல்லபாய் பட்டேலின் மறுஉருவம்… அமித்ஷாவை புகழ்ந்த ஆர்.பி.உதயகுமார்

Published On:

| By Selvam

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சர்தார் வல்லபாய் பட்டேலின் மறு உருவம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (மார்ச் 27) புகழ்ந்து பேசியுள்ளார். Udhayakumar appreciates Amit Shah

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “இரண்டு தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் இரும்பு மனிதரும் சர்தார் வல்லபாய் பட்டேலின் மறு உருவமாக இருக்கக்கூடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நேரில் சந்தித்து பேசியிருப்பது இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெறுவதற்கான சந்திப்பாக இது அமைந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பிஎம்ஸ்ரீ கல்வி திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனை தமிழக மக்களிடம் எடுத்து சொல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் நாம் வீடு வீடாக சென்று இந்த சந்திப்பு குறித்து மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் விநியோகிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். Udhayakumar appreciates Amit Shah

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share