more ipl titles then dhoni
ஐபிஎல் டைட்டிலை தோனியை விட அதிகம் வென்ற இரண்டு வீரர்கள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.
கோடிக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருக்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு 17-வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த சீசன் தான் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோப்பையுடன் அவர் விடைபெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை அணியை பொறுத்தவரை தோனியின் தலைமையில் இதுவரை 11 முறை ஐபிஎல் இறுதிப்போட்டியை எதிர்கொண்டுள்ளது. இதில் 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய வருடங்களில் சென்னை அணி ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.
அதேபோல 2008, 2012, 2013, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது. என்றாலும் அதிகமுறை பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடிய அணி என்ற சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் தோனியை காட்டிலும் அதிக முறை ஐபிஎல் டைட்டிலை வென்ற வீரர்கள் என்ற புதிய சாதனையை அம்பாதி ராயுடு, ரோஹித் சர்மா இருவரும் படைத்துள்ளனர்.
அம்பாதி ராயுடு மும்பை அணியில் விளையாடியபோது 2013, 2015, 2017 ஆண்டுகளில் மும்பை அணி கோப்பை வென்றது. அதேபோல சென்னை அணிக்காக அவர் விளையாடிய போது 2018, 2021, 2023 ஆண்டுகளில் சென்னை அணி கோப்பை வென்றது.
மற்றொரு வீரரான ரோஹித் சர்மா முதன்முதலில் 2008-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். முதல் வருடத்திலேயே அந்த அணி கோப்பை வென்றது.
தொடர்ந்து மும்பை அணிக்கு வந்த ரோஹித் கேப்டனாக 2013, 2015, 2017, 2019, 2020 வருடங்களில் கோப்பையை வென்றார். இதனால் ஆறு முறை ரோஹித்தும் ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியுள்ளார்.
இந்த 2024 வருடம் ஐபிஎல் டைட்டிலை வென்றால் இந்த இரண்டு வீரர்களின் சாதனையையும், தோனி சமன் செய்து விடுவார்.
சென்னை அணியின் கேப்டனாக வெற்றியுடன் தோனி விடைபெறுவாரா? என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா?
காந்தி நினைவு நாள்: பாஜகவுக்கு எதிரான அரசியல் ஆக்கிய திமுக!
more ipl titles then dhoni
Comments are closed.