மிகவும் பலவீனமான போட்டியாளராக இருந்த ரவீனா, தற்போது பிக்பாஸ் டீமுக்கு சிறந்த கண்டெண்ட் அளிப்பவராக மாறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது குடும்ப உறுப்பினர்கள், போட்டியாளர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் வீட்டுக்குள் அன்பு பெருகுவதால் சச்சரவு சற்றே குறைந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய (டிசம்பர் 23) ப்ரோமோவில் ரவீனாவின் அம்மா வீட்டுக்குள் வரும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
https://twitter.com/SriniMama1/status/1738527221521039650
அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரின் உறவினரும், சகோதரரும் வீட்டுக்குள் வந்து ரவீனாவை சந்தித்து சென்றனர்.
அப்போது ரவீனா உறவினர் மொத்தமாக மணி சந்திராவை டேமேஜ் செய்து விட்டார். இதனால் வரும் நாட்களில் ரவீனா – மணி சந்திரா உறவு எப்படி இருக்கப்போகிறது? என்னும் கேள்வி எழுந்துள்ளது.
https://twitter.com/itzSekar/status/1738544508932112752
அதை நிரூபிப்பது போல தற்போது பிக்பாஸ், ரவீனாவுக்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்து இருக்கிறார். இதனால் தான் ரவீனாவின் அம்மாவை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், ”நீங்க மொதல்லயே ரவீனா அம்மாவ வீட்டுக்குள்ள அனுப்பி வச்சு இருக்கலாமே பிக்பாஸ்?,” என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்படியே சென்றால் பிக்பாஸ் இறுதிப்போட்டியின் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக, ரவீனா வந்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
இந்திய பெருங்கடலில் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!
IPL2024: ‘கர்மா இஸ் எ பூமராங்’ மும்பைக்கு எதிராக பறக்கும் மீம்ஸ்கள்!