Video: ‘பிரியாணிக்கு வெயிட்டிங்’… மீண்டும் கவனம் ஈர்த்த விஷால்

Published On:

| By Manjula

செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால் தொடர்ந்து, சண்டக்கோழி படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விஷாலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் விஷாலுக்கென ரசிகர்கள் உள்ளனர்.

ADVERTISEMENT

சினிமாவைத் தாண்டி அவ்வப்போது மக்கள் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார் விஷால். ரத்னம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் படக்குழுவினருடன் அமர்ந்து விருந்து உண்ணும் போது விஷால் இறைவழிபாடு செய்தார்.

ADVERTISEMENT

இதைக்கண்டு யோகிபாபு கொடுத்த ரியாக்ஷன் நெட்டிசன்களால் கிண்டல் அடிக்கப்பட்டாலும், விஷாலுக்கு ஆதரவாகவும் பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிவாசலில் இறை வழிபாடு செய்யும் வீடியோவை விஷால் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

அதில் அனைவருக்கும் தனது ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்த விஷால், ஆர்யாவை டேக் செய்து “பிரியாணிக்கு வெயிட்டிங் மச்சி” என்று பதிவிட்டுள்ளார். தற்போது விஷாலின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகி உள்ள ரத்னம் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது துப்பறிவாளன் 2 படத்திற்கான பணிகளில் விஷால் பிசியாக ஈடுபட்டு வருகிறார்.

-கார்த்திக் ராஜா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தலுக்கு பிறகு செல்போன் கட்டணம் 15 – 17 சதவீதமாக உயரும்” : பகீர் ரிப்போர்ட்!

பேங்க் எம்ப்ளாயி ‘அக்கவுண்ட்ல’ இவ்வளவு பணமா?…’லக்கி பாஸ்கர்’ டீசர் எப்படி?

Thug Life: அடுத்தடுத்து வெளியேறும் நட்சத்திரங்கள்… அந்த நடிகர் மட்டும் உறுதியாம்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share