ஆறு, சாமி, தாமிரபரணி, சிங்கம் என, தமிழ் சினிமாவின் மெகா பிளாக்பஸ்டர் கமர்சியல் படங்களை இயக்கியவர் ஹரி.
பஞ்ச் டயலாக்ஸ், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடியான ஆக்சன் என தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
ஒரு படத்தின் அடுத்த பாகத்தை வெற்றி படமாக கொடுக்க முடியாமல் தமிழ் சினிமா இயக்குநர்கள் போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், சிங்கம் 1, சிங்கம் 2 & சிங்கம் 3 என மூன்று பாகங்களை இயக்கி அதிரடி ஹிட் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஆனால், சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய ஹரிக்கு அந்த படம் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்தநிலையில் ஹரி அளித்த பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹரி – விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ரத்னம் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி அளித்த இயக்குநர் ஹரி, சாமி – சிங்கம் சந்தித்து கொள்வது போன்ற ஒரு காட்சி சிங்கம் 2 படத்தில் இருந்தது என்ற சூப்பர் தகவலை பகிர்ந்துள்ளார்.
பேட்டியில், “சாமி ஆறுச்சாமியும், சிங்கம் துரைசிங்கமும் இணைந்து ஒரே படத்தில் வருவது போல் Cinematic Universe கான்செப்ட் ஐடியா இருக்கிறதா?” என்று தொகுப்பாளர் கேட்டார்.
இதற்கு ஹரி, “சிங்கம் 2 படத்தை எடுக்கும்போது துரைசிங்கம் கதாபாத்திரமும் ஆறுச்சாமி கதாபாத்திரமும் ரோட்டில் சந்தித்துக் கொள்கின்றனர்.
அப்போது துரைசிங்கம், ஆறுச்சாமியை பார்த்து அந்த பெருமாள் பிச்சை என்ன ஆனார்?
நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேள்வி கேட்பது போலவும், ஆனால் ஆறுச்சாமி பதில் சொல்லாமல் துரைசிங்கத்தைப் பார்க்க, துரைசிங்கமும் ஒரு சிறு புன்னகையுடன் ஆறுச்சாமியைப் பார்க்கிறார்.
இருவருக்கும் என்ன நடந்திருக்கும் என்ற புரிதல் உள்ளது என்பது போன்ற ஒரு மாஸ் சீன் ஐடியா இருந்தது.
ஆனால் அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைப்பது சற்று கஷ்டமான விஷயம் என்று தோன்றியதால் அந்த ஐடியாவை நாங்கள் காட்சிப் படுத்தாமல் விட்டு விட்டோம்.
தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்படிப்பட்ட ஒரு ஐடியாவைத் தொடர்ந்து தனது படங்களில் மிகச் சிறப்பாக செய்து வருகிறார் அதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
இயக்குநர் ஹரியின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீண்டும் ஹரி இயக்கத்தில் சிங்கம் 4 வெளியாக வேண்டும்.
அதில் சிங்கம் – சாமி சந்திக்கும் ஒரு காட்சி இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ரத்னம் படம் வெளியாக உள்ளது.
ஹரி-விஷால் காம்போவில் இதற்கு முன் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் ஹிட்டடித்ததால், இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீனவர்களின் உயிர்காக்க “கடல் ஆம்புலன்ஸ்” திட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு!
அதிரடியாக குறைந்த தங்கம்: எவ்வளவு தெரியுமா?
கச்சத் தீவு… கடற்கரைத் தொகுதிகளில் ‘இறங்கி’ வேலை செய்யும் பாஜக