”ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும்” : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

Published On:

| By christopher

ration will be door delivery : cm rangasamy

ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (மார்ச் 19) அறிவித்துள்ளார். ration will be door delivery : cm rangasamy

புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், நெல்லித்தோப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர் விவிலியன் ரிச்சர்ஸ் ஜான்குமார், “மாநில அரசு கொடுக்கும் இலவச அரிசியை பெரும்பாலான மக்கள் வாங்குவதில்லை” என குற்றஞ்சாட்டினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, ”புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ரேஷன் கடைகளை திறந்துள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் வழங்கப்படும்” என தெரிவித்தார்.

தமிழில் பெயர் பலகை! ration will be door delivery : cm rangasamy

இதே போன்று நேற்று சட்டமன்றத்தின் பூஜ்யநேரத்தில் பேசிய சுயேச்சை எம்எல்ஏ நேரு, “தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகள் தமிழ் எழுத்துகளின் வாசகங்கள் முதல் வரிசையில் இடம்பெற செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்று ”புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில் தமிழ் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும்” என ரங்கசாமி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share