ஏழை, எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் கூட்டுறவு பண்டக சாலைகள், நியாய விலைக்கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டு இனிப்பு பொங்கல் தொகுப்பு, சிறப்பு கூட்டுறவு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு ஆகிய மூன்று வகையான பொங்கல் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

இனிப்பு பொங்கல் தொகுப்பு ரூ.199/
பச்சரிசி (BPT 43) – 500கி
பாகு வெல்லம் – 500கி
ஏலக்காய் – 5
முந்திரி – 50கி
ஆவின் நெய் – 50கி
பாசி பருப்பு – 100கி
உலர் திராட்சை – 50கி
சிறிய பை – 1

கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499/-
மஞ்சள் தூள் – 50கி
சர்க்கரை – 500கி
துவரம் பருப்பு – 250கி
கடலைப் பருப்பு – 100கி
பாசிப் பருப்பு – 100கி
உளுத்தம் பருப்பு – 250கி
கூட்டுறவுப்பு – 1 கிலோ
நீட்டு மிளகாய் – 250கி
தனியா – 250கி
புளி – 250கி
பொட்டுக் கடலை – 200கி
மிளகாய் தூள் – 50கி
செக்கு கடலை – 1/2 லிட்டர்
எண்ணெய்
கடுகு – 100கி
சீரகம் – 50கி
மிளகு – 25கி
வெந்தயம் – 100 கி
சோம்பு – 50கி
பெருங்காயம்- 25கி
மளிகை பை – 1

இதேபோல, பெரும்பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, கூட்டுறவுப்பு என 35 விதமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…