டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான ரத்தன் டாடா மும்பை மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் இன்று (அக்டோபர் 9) செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக நேற்று ரத்தன் டாடா எக்ஸ் வலைதள பதிவில், ” எனது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதை நான் அறிவேன். வயது மூப்பு காரணமாக நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
மற்றபடி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறேன். எனது உடல்நிலை தொடர்பாக தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்குமாறு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ரத்தன் டாடா குடும்ப உறுப்பினர்களோ, டாடா குழுமமோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…