ரூ. 500 கோடியை அப்படியே தூக்கிக் கொடுத்த ரத்தன் டாடா … யாருக்கு?

Published On:

| By Kumaresan M

டாடா குழுமத்தின் தலைவராக இருந்த 86 வயதான ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 9 ம் தேதி மரணமடைந்தார். திருமணமாகாமல் அவர் தனிமையில்தான் வசித்தார். Ratan gifts 500 crore

டாடா குழுமம் டாடா சன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்தமானது. எனவே, இந்தியாவின் மற்ற தொழிலதிபர்கள் போல ரத்தன் டாடாவுக்கு பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை. இந்தியாவின் 421 பெரிய பணக்காரராகவே அவரை ஹாருன் இந்தியா அமைப்பு பட்டியலிட்டுள்ளது. ரத்தன் டாடாவுக்கு 3,500 கோடி சொத்து இருந்தது.

ADVERTISEMENT

ரத்தன் டாடா மறைவுக்கு முன்னரே, தனது சொத்துக்களை விரிவாக உயிலாக எழுதி வைத்துள்ளார். தனது சொத்தில் 500 கோடியை அப்படியே தொழிலதிபர் ஒருவருக்கு தானமாக கொடுத்துள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. அந்த தொழிலதிபரின் பெயர் மோகினி மோகன் தத்தா என்பதாகும். ஜாம்ஷெட்பூரை சேர்ந்த இவர்,சொந்தமாக ஸ்டல்லியன் என்ற பெயரில் டிராவல் ஏஜன்சி நடத்தி வந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தாஜ் குருப் ஹோட்டல்சின் துணை நிறுவனமான தாஸ் சர்வீசனுடன் ஸ்டல்லியன் இணைக்கப்பட்டது. அப்போது, இந்த நிறுவனத்தின் 80 சதவிகித பங்குகள் மோகினி மோகன் தாத்தாவுக்கும் 20 சதவிகித பங்குடான் தாஜ் சர்வீசசுக்கும் சொந்தமாக இருந்தது.

ADVERTISEMENT

அப்போது, முதல் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர்களில் மோகினி மோகன் தத்தா இருந்துள்ளார். அந்த நெருக்கம் காரணமாக தனது சொத்தில் 500 கோடியை அப்படியே மோகினி மோகன் தத்தா பெயருக்கு மாற்றியுள்ளார் ரத்தன் டாடா.

கடந்த 1960 ஆம் ஆண்டுவாக்கில் ரத்தன் டாடா தனது 24 வது வயதில் ஜாம்ஷெட்பூரில் டீலர்களுக்கான கூட்டத்தை நடத்தியுள்ளார். அப்போது, முதன்முறையாக மோகினி மோகன் தத்தாவை சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT

இருவருக்கும் நல்ல நட்பு உருவாகி அது கடைசி வரை தொடர்ந்துள்ளது. ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மோகினி மோகன் தத்தா, என்னை வழிநடத்தி உருவாக்கியவர் என்று ரத்தன் டாடா குறித்து நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

தற்போது, தத்தாவுக்கு 74 வயதாகிறது.

தத்தா தவிர ரத்தன் டாடாவின் ஒன்று விட்ட சகோதரிகள் ஷிரென் ஜீஜீபாய் மற்றும் டியானா ஜீஜீபாய் ஆகியோருக்கும் ரத்தன் டாடா பெருமளவு சொத்துகளை எழுதி வைத்துள்ளார். Ratan gifts 500 crore

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share