சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா: இது தானா காரணம்?

Published On:

| By Jegadeesh

புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘கீத கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமான இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

ADVERTISEMENT

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்து ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற  புஷ்பா திரைப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

alt="rashmika"

இந்நிலையில், புஷ்பா – 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதால் அந்தப் படத்திற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா தன் சம்பளத்தை ரூ.1 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

நடிகர் விஜய்  நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

காமன்வெல்த் போட்டியில் யுவன் சங்கர் ராஜா பாடல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share