சென்சாரில் 60 கட் வாங்கிய ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா’!

Published On:

| By Kavi

லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’

ரஜினிகாந்த் நடித்த ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..என்ற பாடலையும் அதற்கான காட்சிகளையும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதையே தலைப்பாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

ADVERTISEMENT

இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ. ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி என்று இந்திய மொழிகளில் சுமார் 350 திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணி புரிந்திருக்கும் கேஷவ் தெபுர் இயக்கியுள்ளார்.

ADVERTISEMENT

நடன இயக்குநர்கள் பிரபுதேவா, RRR படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ‘நாட்டு நாட்டு ‘ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித், ராகவா லாரன்ஸ் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றியவர். பல்வேறு மொழிகளில் நடனக் கலைஞராக சுமார் 2000 படங்களில் தோன்றி ஆடியவர். அப்படிப்பட்ட நடன இயக்குநர் இயக்கி உள்ள படம் இது. படத்திற்கு இசை ஜி. கே. வி , ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்.

இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல் , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,ஜெஃபி, ஜெயவாணி, அக்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

பத்திரிகையாளர்களுக்காக நேற்று காலை படத்தின் பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது படம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் படத்தின் கதை, தணிக்கை சம்பந்தமாக பேசிய இயக்குநர்,

லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த சில வாலிபர்கள் ஒரு க்ரைமுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் அதிலிருந்து அவர்கள் வெளிவந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் ஒருவரிக் கதை.

அதற்கிடையே நடக்கும் பரபரப்பான விறுவிறுப்பான கிளுகிளுப்பான சம்பவங்கள் தான் கதை செல்லும் பாதை. க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்கும் என்றார்இயக்குநர்.

மேலும் கூறியதாவது,

படம் தணிக்கைக்காக திரையிடப்பட்ட போது படத்தில் இடம்பெற்றுள்ள இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் அரட்டைகளும், சுதந்திரமான காட்சிகளும் பார்த்து அதிர்ந்து போன சென்னை மண்டல தணிக்கை அதிகாரி அறுபது வெட்டுகள் கொடுத்தார்கள்.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறு தணிக்கைக்கு விண்ணப்பித்தபோது, நடிகை கவுதமி படம் பார்த்துட்டு படத்தில் வரும் நக்மா ராகினி லலிதா கேசவ் என்கிற பேர் எல்லாம் நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு விளக்கம் கூறியபோது வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வெளிய போங்கனு கூறியதாக கூறும் இயக்குநர் ஐந்துவருடத்துக்கு ஒரு முறை சென்சார் போர்டு விதி முறைகளை மாற்ற வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமியிடம் படம் பற்றிகேட்டபோது….

“இப்படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. பெல்லாரி ராஜாவும் தாமோதரனும் அரசியலில் ஒன்றாக இருந்து பகைவர்களாக மாறியவர்கள். பெல்லாரி ராஜா அந்த தாமுவைக் கொன்று விடுகிறான். அதை நேரில் பார்த்த பெண் வீடியோ எடுத்து விடுகிறாள். அவளைத் துரத்துகிறது பெல்லாரியின் கும்பல். அவள் எஸ்.ஆர்.லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடிப் போகிறாள்.

லேடிஸ் ஹாஸ்டலுக்குள் இளைஞர்கள் இரண்டு பேர் நுழைந்து விடுகிறார்கள். அங்குள்ள இரு பெண்களால் ஒரு கால் பாய் அழைக்கப்படுகிறான். ஆள் மாறாட்டக் குழப்பத்தில் ஒரு கொலை நடக்கிறது.

இப்படி அடுத்தடுத்த கொலைகள் ,பரபரப்பு விறுவிறுப்பு கொண்ட பின்னணியில் இக்கதை உருவாகியுள்ளது”என்கிறார் தயாரிப்பாளர்.

இப்படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி என்கிற பெண்மணி தயாரித்துள்ளார். படத்துக்கான கதை பிடித்துப் போனதால் இப்படத்தைத் தயாரித்ததாக கூறினார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமர் பிரசாத் மீது குண்டாஸ்: மனைவி நீதிமன்றத்தில் மனு!

தேவரின் கொள்கைகள் காலத்தால் அழியாதது: பிரதமர் புகழஞ்சலி!

“ஆவின் கவரில் ஸ்டாலின் – விளம்பர வெறி” : அதிமுக!

கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!

RaRa SaraSukku RaRa Movie Pre Release Press Meet

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share