சிஎஸ்கே பவுலர்களால் தடுமாறும் தமிழ்நாடு

Published On:

| By Minnambalam Login1

ranji trophy tamil nadu

ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், மும்பையின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் தமிழ்நாடு அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்தது.

மும்பை – தமிழ்நாடு அணிகள் இடையிலான அரையிறுதி போட்டி இன்று (மார்ச் 2) மும்பை எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு, ஆரம்பமே பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.

மும்பை அணியின் ஷர்துல் தாகூர் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில், சாய் சுதர்சன் ரன்கள் எதுவும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மும்பை அணியின் பந்துவீச்சினை தாக்குப்பிடிக்க முடியாமல், தமிழ்நாடு அணி சரசரவென சீட்டுக்கட்டு போல சரிந்தது. தமிழ்நாடு அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மறுபக்கம் மும்பையின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய விஜய் ஷங்கர் 44 ரன்னிலும் , வாஷிங்டன் சுந்தர் 43 ரன்னிலும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் முடிவில் 146 ரன்களுக்கு தமிழ்நாடு அணி சுருண்டது. மும்பையை பொறுத்தவரை துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாகூர், முஷீர்கான், தனுஷ் கொடியான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தற்போது மும்பை அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸினை விளையாடி வருகிறது. அந்த அணி 17 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை எடுத்துள்ளது.

-மாணவ நிருபர் இரசிக பிரியா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக – காங்கிரஸ்… செல்போனில் பேச்சுவார்த்தை: செல்வப்பெருந்தகை புது விளக்கம்!

தமிழ் நாட்டின் ‘டாப் 3’ வெயில் மாவட்டங்கள் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share