முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் நடைபெற்ற மாற்றத்துக்கு பின்னணியாக பல்வேறு தகவல்கள் திமுக வட்டாரத்தில் உலவுகின்றன.
அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், மஸ்தான், இளித்துறை ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த பட்டியலில் நான்காவதாக தற்போதைய அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியும் இருந்தார். ஆனால் அவருக்காக முரசொலி செல்வம் முதல்வரிடம் பேசி அவரது அமைச்சர் பதவியை காப்பாற்றி விட்டார் என்கிறார்கள் வேலூர் திமுக வட்டாரங்களில்.
மேலும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளித்துறை ராமச்சந்திரன், சட்டமன்ற அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முதலில் அரசு கொறடா பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தான்.
ஆனால் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனை அமைச்சரவையில் இருந்து விடுவிக்கும் பட்சத்தில்… கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருக்கும் படுகர் சமுதாய மக்கள் அதிருப்தி அடைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்… சட்டமன்ற அரசு கொறடா பதவியை அவருக்கு அளிக்கலாம் என நீலகிரி எம். பி. யும் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா முதல்வரிடம் பரிந்துரைத்திருக்கிறார்.
அந்த அடிப்படையிலேயே கடைசி நேர மாற்றங்களில் சட்டமன்ற அரசு கொறடாவாகும் வாய்ப்பை வசந்தம் கார்த்திகேயன் மிஸ் செய்திருக்கிறார் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
விராட் கோலி மட்டும் போதும் : ஆர்.சி.பி அணிக்கு ஆர்.பி.சிங் ஆலோசனை!