ஈ நாடு மற்றும் ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் இன்று (ஜூன் 8) காலமானார். அவருக்கு வயது 87.
ராமோஜிராவ், 1936-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள புடபருபுடி கிராமத்தில் பிறந்தார். ராமோஜி குழும நிறுவனரான இவர் ஈ நாடு, ஈ டிவி பாரத் ஆகிய ஊடகங்களின் நிறுவனராகவும் இருந்து வந்தார்.
ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய ராமோஜி ஃபிலிம் சிட்டி ஸ்டூடியோவில் பாகுபலி, வலிமை, புஷ்பா உள்ளிட்ட திரைப்படங்கள் படமாக்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமோஜிராவ், கடந்த ஜூன் 5-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உயர் ரத்த அழுத்தம், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட ராமோஜிக்கு நேற்று இரவு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று அதிகாலை 4.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி ராமோஜி காலமானார்.
அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் எடப்பாடி ஆலோசனை வரை!