இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (ஜூன் 24) ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமை (ஜூன் 22) மீன் பிடித்து விட்டு அதிகாலை கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே மீனவர்கள் 18 பேரை கைது செய்தனர்.
அத்துடன் மீனவர்களின் மூன்று படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (ஜூன் 24) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!
கிச்சன் கீர்த்தனா: சீட் ஸ்நாக்ஸ்
ஜாமீன் நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்
நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் அவதூறு… டிஜிபிக்கு நோட்டீஸ்!
