பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துவரும் தளபதி 64 திரைப்படத்தில் நடிகர் ரமேஷ் திலக் இணைந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் திரைப்படத்திற்கு ‘தளபதி64’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வரும் இந்தப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துவருகிறார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கைதி திரைப்பட வில்லன் அர்ஜுன் தாஸ், பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
கர்நாடகாவின் ஷிமோகா பகுதிகளில் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நடந்துவருவதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. ரசிகர்கள் சிலர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில வீடியோக்களையும் தங்களது வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். அதில் ரசிகர் ஒருவர் பகிர்ந்திருந்த வீடியோவை ரீடிவீட் செய்துள்ளார், பிரபல பண்பலைத்தொகுப்பாளரும், நடிகருமான ரமேஷ் திலக்.
Vanakkam makkale from #Thalapathy64 la irundhu???????? https://t.co/Esg3qqgOyH
— Ramesh Thilak (@thilak_ramesh) December 20, 2019
காக்கா முட்டை, ஒரு நாள் கூத்து போன்ற திரைப்படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்திருந்த ரமேஷ் திலக் கடைசியாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் தற்போது விஜய்யுடன் இணைந்து தளபதி 64 படத்தில் நடிக்கவிருப்பதை, ‘வணக்கம் மக்களே, தளபதி64-இல் இருந்து’ என்று டிவிட்டரில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.