“எங்களது கோரிக்கை ஏற்பு” – முதல்வருக்கு ராமதாஸ் நன்றி!

Published On:

| By Selvam

சமூகநீதிக்கு ஏற்பட்ட பாதிப்பை போக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்திட சட்ட வல்லுநர் குழுவை திமுக அரசு அமைத்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை காப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் அரசுத்துறை பதவி உயர்வில் வழங்கப்பட்ட ஓபிசி இட ஒதுக்கீடு செல்லாது என 02.09.2020 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் சமூகநீதிக்கு ஏற்பட்ட பாதிப்பை போக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என அப்போதே வலியுறுத்தியிருந்தேன்.

ADVERTISEMENT

எனது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதும், சமூகநீதி சார்ந்த வழக்குகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமார் வல்லுனர் குழுவின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவை, நீதிமன்ற ஆய்வுகளை தாங்கும் வகையில் வலிமையாக தயாரித்து வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

கையில் காயம் : அரையிறுதிப் போட்டியில் ஆடுவாரா ரோகித்?

பத்திரிகையாளர்களை விரட்டுவதா? – கேரள ஆளுநருக்கு கண்டனம்!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share