இதை செய்தால் பாமக வெற்றி உறுதி… அடித்து சொன்ன ராமதாஸ்

Published On:

| By Selvam

தேர்தலுக்கு முன்பாக பாமக தொழிற்சங்கத்தை வலுப்படுத்தினால், நிச்சயமாக 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 26) தெரிவித்துள்ளார்.

வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு மே 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனையடுத்து பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வன்னியர் சங்கம் கூட்டம் என அடுத்தடுத்த கூட்டங்களை நடத்தி வருகிறார் ராமதாஸ். ramadoss says we should strengthen

ADVERTISEMENT

நேற்று ராமதாஸ் தலைமையில் சமூக முன்னேற்ற சங்கம் கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கேஆர்எஸ் அம்மா திருமண மண்டபத்தில் பாமக பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தொழிற்சங்க பொதுச்செயலாளர் இராம முத்துக்குமார் உள்ளிட்ட 400 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ஜி.கே.மணி பேசும்போது, “உழைக்கும் மக்கள் உரிமை பெற்று வாழ வேண்டும். பாமக தொடங்குவதற்கு முன்பு தொடங்கப்பட்டது பாட்டாளி தொழிற்சங்கம். ஆட்டோ, கட்டுமானம், சாலை வியாபாரிகள், சுமை தூங்குபவர்கள் என அதிக அளவில் பாட்டாளி தொழிற்சங்கம் தொடங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர் ராமதாஸ்” என்றார்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், “தொழிற்சங்கத்துக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் அல்லது தனி நபருக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை தீர்த்து வைக்கக் கூடியவர் நமது கவுரவத் தலைவர் ஜி.கே.மணி. ramadoss says we should strengthen

ADVERTISEMENT

பாமக தொழிற்சங்க பொதுச் செயலாளர் ராம முத்துக்குமார், என்னுடன் 45 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இருந்தபோதிலும் அவரால் சட்டமன்றத்திற்குள் செல்ல முடியவில்லை. இந்த முறை அவர் சட்டமன்றத்திற்கு செல்ல நாம் உழைக்க வேண்டும்

தேர்தலுக்கு முன்பாக அமைப்பு மற்றும் அமைப்புசாரா அமைப்புகளை உருவாக்கி அவற்றிற்கு கவுரவத் தலைவர் ஆலோசனை வழங்கி தொழிற்சங்கத்தை பலப்படுத்தினால் தான் நாம் ஆட்சி கட்டிலில் அமர முடியும். கட்சி, சங்கத்தை விட இதான் பெரிய அமைப்பாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தொழிற்சங்கத்தை திட்டமிட்டு தொடங்கி பணியாற்ற வேண்டும். அடுத்த முறை சந்திக்கும் பொழுது இந்த அமைப்பை மிகப்பெரிதாக உருவாக்கவேண்டும்” என்று தெரிவித்தார். ramadoss says we should strengthen

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share