பாஜக கூட்டணியில் சேர அழைப்பு வரவில்லை… ராமதாஸ் பேட்டி!

Published On:

| By Selvam

பாஜக கூட்டணியில் சேர அழைப்பு எதுவும் வரவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 7) தெரிவித்துள்ளார். Ramadoss says there is no invite from bjp

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்தடைந்தார் ராமதாஸ். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் மகள்கள் இருக்கின்றனர். பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகளைப் பார்க்க செல்கிறேன். 2 நாட்கள் இருந்துவிட்டு தைலாபுரம் வருவேன்” என்றார்.

ADVERTISEMENT

சென்னை வந்தடைந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த உலகத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அதேபோல, பாமகவில் நிலவும் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்படும். குருமூர்த்தி நல்லவர், மிகவும் புத்திசாலி. அவர் சொன்னால் நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன். அதனால், அவர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து என்னிடம் பேசினார். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர அழைப்பு எதுவும் வரவில்லை” என்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படுமா அல்லது உங்களிடம் தான் அந்த பதவி இருக்குமா என்ற கேள்விக்கு, “இதற்கு நான் பிறகு பதில் சொல்கிறேன்” என்றார். Ramadoss says there is no invite from bjp

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share