முதல்வர் ஸ்டாலினைப் போல் பிரகாசமான அரசியல் ஞான ஒளி எனக்கு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 21-ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் ” கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின் நோக்கம் என்ன? இந்த ரகசிய சந்திப்பு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில், நவம்பர் 25-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், ராமதாஸின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் டென்ஷனான ஸ்டாலின், “அவருக்கு வேறு வேலையில்லை. தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.
ராமதாஸ் குறித்து ஸ்டாலின் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அன்றைய தினம் கோபமாக பேட்டியளித்தார்.
இதனையடுத்து நவம்பர் 25-ஆம் தேதி இரவே வட மாவட்டங்களின் சில பகுதிகளில் பாமக போராட்டம் நடத்தியது. நவம்பர் 26-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஸ்டாலினை கண்டித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (நவம்பர் 27) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டாலினினின் விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ராமதாஸ், “முதல்வர் ஸ்டாலினைப் போல் பிரகாசமான அரசியல் ஞான ஒளி எனக்கு இல்லை. அதனால் நான் என்ன செய்ய முடியும். வருத்தமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
சவரனுக்கு ரூ.120 குறைவு…. இன்றைய தங்கம் எவ்வளவு?
ஃபெங்கல் புயல் எப்போது உருவாகும்? – வானிலை மையம் டேட்டஸ்ட் அப்டேட்!