கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘பாமகவின் நிறுவனரான நானே இனி கட்சியின் தலைவராகவும் செயல்படுவேன். அன்புமணி இனி செயல் தலைவராக செயல்படுவார்’ என்று அறிவித்தார்.
டாக்டர் அன்புமணியோ, ‘நான் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்’ என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டி வந்தார். Ramadoss declare himself as a president of pmk
தொடர்ந்து ராமதாஸ் நடத்திய கூட்டங்களை அன்புமணி புறக்கணித்து வந்த நிலையில், கடந்த மே 29-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அன்புமணியை 35 வயதில் கேபினட் அமைச்சராக்கியது நான் செய்த தவறு. தாய் மீது அவர் பாட்டிலை தூக்கி வீசினார்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

நேற்று தைலாபுரம் சென்ற அன்புமணியை ராமதாஸ் சந்திக்க மறுத்துவிட்டாராம். குருமூர்த்தி, சைதை துரைசாமியிடமும் பிடிகொடுத்து பேசவில்லை ராமதாஸ்.
இந்தநிலையில், இன்று பக்ரீத் பண்டிகை வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ராமதாஸ், அதில் நிறுவனர் – தலைவர் என்று தன்னை குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு வெளியிட்ட அறிக்கைகளில் நிறுவனர் என்று மட்டுமே குறிப்பிட்டு வந்த ராமதாஸ், தற்போது தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி – ராமதாஸ் இடையே நடைபெற்று வந்த மோதல், முடிவுக்கு வந்ததாக செய்திகள் வந்த நிலையில், தற்போது தலைவராகவும் நானே தொடர்கிறேன் என்று அன்புமணிக்கு ராமதாஸ் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். Ramadoss declare himself as a president of pmk