விஜய்யுடன் கூட்டணியா? – ராமதாஸ் விளக்கம்!

Published On:

| By Selvam

கடந்த நவம்பர் 3-ஆம் தேதி “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூல் பாடல் வரிகளை பாமக நிறுவனர் ராமதாஸ்  தனது  சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை வரவேற்று ராமதாஸ் பதிவு வெளியிட்டிருப்பதாகவும் இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்றும் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்தநிலையில், தான் பதிவிட்ட நன்னூல் பாடலுக்கும் அரசியல் கூட்டணிக்கும் தொடர்பில்லை என்று ராமதாஸ் இன்று விளக்கமளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது , “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பது ஒரு நல்ல நன்னூல் சூத்திரம். இதனை என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தேன். இதற்கும் தேர்தல் அரசியல் கூட்டணிக்கும் சம்பந்தமே இல்லை. இதனால் பாஜக கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணியில் சேரப்போவதாக சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், கூட்டணி குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியின் பொதுக்குழு கூடி, கூட்டணி குறித்து முடிவு செய்யும்.  அதற்கு முன்பாக பாமகவை வலுப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். பாமக மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தான் நன்னூல் சூத்திரத்தை பகிர்ந்திருந்தேன்” என்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவையை தொடர்ந்து விருதுநகரில் ஸ்டாலின் கள ஆய்வு!

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்… எங்களை அடக்க முடியாது – ராமதாஸ் வார்னிங்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share