பாமக பொருளாளர் பதவியில் இருந்து அன்புமணி ஆதரவாளரான திலகபாமா நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ஆனால் திலகபாமா, பாமகவின் பொருளாளராக தொடர்ந்து நீடிப்பார் என கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். Ramadoss Announces Removal of PMK Treasurer Thilagabama
பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டுள்ளார்; பாமகவின் புதிய பொருளாளராக திருப்பூர் அன்சூர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பாமகவில் கடந்த 2000-2007-ம் ஆண்டு வரை மாநிலப் பொருளாளராக பதவி வகித்தவர் அன்சூர் உசேன்.

ஆனால் திலகபாமா, பாமகவின் பொருளாளராக தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.