பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ராமதாஸ் அறிவிப்பு!

Published On:

| By Selvam

Ramadoss announced pmk district secretaries

பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நாளை (மே 16) நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 15) அறிவித்துள்ளார். Ramadoss announced pmk district secretaries

கடந்த மே 11-ஆம் தேதி வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “நிறைய பேர் இங்கு உழைக்காமல், ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும். இனி அப்படி இருந்தால், உங்கள் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன். எனவே இனி சும்மா ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியாது.

ADVERTISEMENT

சிலர் கூட்டணி பற்றி பேசுகிறார்கள். கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதனை நான் முடிவு செய்வேன். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்” என்று கடும் கோபத்துடன் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக பேசினார். Ramadoss announced pmk district secretaries

ஒருபுறம் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே பஞ்சாயத்து நீடித்து வரும் நிலையில், ராமதாஸின் இந்தப் பேச்சு பாமகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்தசூழலில், பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தை ராமதாஸ் நாளை (மே 16) காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் கூட்டியுள்ளார். இந்த கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. Ramadoss announced pmk district secretaries

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share