பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ளது. இருவரும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.
சில நிர்வாகிகளை கட்சியில் இருந்து ராமதாஸ் நேற்று (மே 30) நீக்கினார். உடனடியாக, மீண்டும் அவர்கள் அப்பதவியிலேயே தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவித்தார்.
இந்தநிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் வேலூர், ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். Ramadoss and Anbumani discuss with cadres

மேலும், ராமதாஸின் ஆடிட்டர் சுப்புரத்தினத்துடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கட்சிக்கான நிதி எவ்வளவு இருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்ததாக தெரிகிறது.
அதேபோல, சென்னை பனையூர் அக்கரையில் உள்ள தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேசன், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவன் உள்ளிட்டோர் அன்புமணியை இன்று சந்தித்தனர். ராமதாஸ், அன்புமணி என இருதரப்பும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருவது அக்கட்சியினர் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. Ramadoss and Anbumani discuss with cadres