அன்புமணியை 35 வயதில் மத்திய கேபினட் அமைச்சராக்கியது நான் செய்த தவறு என்று ராமதாஸ் இன்று (மே 29) தெரிவித்துள்ளார். Ramadoss accuses anbumani making him central minister
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “தருமபுரியில் நடந்த ஒரு கூட்டத்தில் நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கினீர்கள் என்று அன்புமணி பேசியுள்ளார். இது முழுக்க முழுக்க மற்றவர்களையும், கட்சிக்காரர்களையும் திசைதிருப்பும் முயற்சியாகும்.
தான் செய்த தவறுகளை மறைத்து, என்னை குற்றவாளியாக்கி மக்களிடமும் கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற அன்புமணி முயற்சிக்கிறார். அதற்கான விளக்கத்தையும் பதிலையும் அளிப்பது எனது கடமையாகும். Ramadoss accuses anbumani making him central minister
இனிப்பை தவிர்த்து கசப்பான வார்த்தைகளை கொண்ட மருந்தை தான் பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியை 35 வயதில் எனது சத்தியத்தையும் மீறி மத்திய கேபினட் அமைச்சராக்கியது நான் செய்த தவறு. அன்புமணி தான் தவறான ஆட்டத்தை துவக்கி, முதலில் அடித்து ஆட ஆரம்பித்தார்.
ஏதோ போகிறபோக்கில் இதை நான் சும்மா சொல்லிவிட்டு போகவில்லை. ஆதாரத்தோடு இன்று ஒளிவு மறைவின்றி, நடந்ததை அப்படியே வெளிப்படுத்துகிறேன். பாண்டிச்சேரியில் நடந்த பொதுக்குழுவில், அன்புமணியின் செயலை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேடை நாகரிகமோ அல்லது சபை நாகரிகமோ எதையும் கடைபிடிக்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டார். தன்னை ஒரு அறிவாளி என்றார். வீட்டில் எனக்கு உதவியாகவும் கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்க, முகுந்தனை இளைஞரணி செயலாளர் என்று நான் அறிவித்தேன். சுவற்றில் வீசிய பந்து திரும்ப வருவதுபோல, உடனே மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியான செயல் அல்ல.
மேலும், மேடை நாகரிகம் கருதாமல், அனைவரின் முன்பும் காலை ஆட்டிக்கொண்டிருந்ததும் சரியான செயல் அல்ல. மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா?
நான் பனையூரில் அலுவலகம் திறந்திருக்கிறேன். நீங்கள் அங்கு வந்து என்னை பார்க்கலாம் என்று அவர் சொன்னது சரியான செயலா? நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை, நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்? அழகான ஆளுயர கண்ணாடி என்ற கட்சியை ஒரே நொடியில் உடைத்து நொறுக்கியது யார்?

இதனால் கட்சிக்காரர்கள் உள்ளிட்ட அனைவரும் அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லையே என்று வருந்தினார்கள். கடந்த 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அண்ணா சொன்னது போல, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்தினேன். அதற்கு ஒரு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்திவிட்டார்.
கடந்த காலங்களில் நான் அடைந்த அவமானங்களும் அவலங்களும் இந்த ஊமை சனங்களுக்காக எளிதில் கடந்து வந்துவிட்டேன். ஆனால், இன்று எதிர்பாராத நிலையில், வளர்த்த கிடாவே மார்பில் வீறுகொண்டு இடித்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன். ஆனால், இதையும் நான் வெற்றியோடு கடந்து செல்வேன்.
அன்புமணி கட்சி வளர்ச்சிக்கு தொடர்ந்து இடையூறாக இருந்து, பல தவறுகளை செய்து வந்தார். நிறைய சொல்லலாம். ஆனால், ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்.
ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை கட்சி வளர்சிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அவரை நியமனம் செய்து அந்த கடிதத்தை தமிழ்க்குமரனிடம் கொடுத்தேன். ஆனால், அன்புமணி அவரை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டார். அவரை இரண்டு மாதங்கள் நான் பொறுக்க சொன்னேன்.
பாண்டிச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முந்தைய நாள் இரவே தமிழ்க்குமரன் தனது குடும்பத்துடன் வந்து அங்குள்ள ஓர் விடுதியில் தங்கியிருந்தார். இதை அறிந்த அன்புமணி எனக்கு போன் செய்து தமிழ்க்குமரன் பொதுக்குழு கூட்டத்திற்கு வரக்கூடாது என்றார். இதனால் தமிழ்க்குமரன் பொதுக்குழு கூட்டத்திற்கு வரவில்லை. அவர் எவ்வளவு கலங்கியிருப்பார், கண்ணீர் வடித்திருப்பார், அவமானப்பட்டிருப்பார். அதன்பிறகு தான் அவரை ராஜினாமா செய்ய சொன்னேன். amadoss accuses anbumani making him central minister
அதே செயல் தான் முகுந்தனுக்கும் மேடையிலேயே நடந்தது. பொங்கல் சமயத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் உட்கார்ந்து முகுந்தன் விவகாரம் குறித்து பேசினார்கள். ‘ஏம்பா உன்னோட இரண்டாவது மகளை இளைஞரணி செயலாளர் பதவிக்கு போட்டிருந்தால் நீ அமைதியாக தானே இருந்திருப்பாய்’ என்று அவரது அம்மா அன்புமணியிடம் சொன்னார். உடனே கோபப்பட்டு பாட்டிலை தூக்கி அம்மா மீது வீசினார். ஆனால், அவர் மீது பாட்டில் படாமல், சுவற்றில் பட்டது.
கட்சியின் நிர்வாகக்குழு கூட்டங்களில், யாருடைய ஆலோசனைகளையும் அன்புமணி ஏற்பதில்லை. மற்றவர்கள் பேசுவதை அவர் அனுமதிப்பதில்லை. ஆனால், கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே நிர்வாக குழு கூட்டத்தில் பேச நிர்வாகிகளுக்கு நான் அனுமதியளிப்பேன். என்னை விமர்சியுங்கள் என்று சொல்வேன். அப்படியெல்லாம் கட்சியை நான் வளர்த்தேன். அதனால் தான் உனக்கு தலைமை பண்பு இல்லை என்று அன்புமணியிடம் சொன்னேன்” என்றார் ராமதாஸ். Ramadoss accuses anbumani making him central minister