ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்று வருகிறது. Ramadan Celebration:Special prayers
ரம்ஜான் பண்டிகை பிறையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் பிறை தோன்றுவதை வைத்தே ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.
அதன்படி தமிழகத்தில் நேற்று பிறை தெரிந்ததால் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி இன்று நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்
சென்னையைப் பொறுத்தவரை எழும்பூர் மாநகராட்சி திடலில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் பலரும் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர் . இதுபோன்று தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தன.
டெல்லி ஃபதேபுரி மசூதி, போபாலில் உள்ள ஈத்கா மசூதி, மகாராஷ்டிராவில் ஜும்மா மஸ்ஜித் உள்ளிட்ட மசூதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட இஸ்லாமிய மக்கள் தொழுகை செய்தனர்.
பிகார் முதல்வர் நிதிஷ்குமார், பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டார்.