ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி பேரணி : பா.ரஞ்சித் அறிவிப்பு!

Published On:

| By christopher

Rally for justice for Armstrong's murder: Pa. Ranjith's announcement!

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் 20ஆம் தேதி  சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெற உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார்.

கடந்த 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி புன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி திருவேங்கடத்திடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது என்கவுன்டர் செய்யப்பட்டார். இது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

K Armstrong murder case: পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত বিএসপি নেতা আর্মস্ট্রং খুনের ঘটনায় মূল অভিযুক্ত | ???????? LatestLY বাংলা

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இன்று (ஜூலை 16) முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், ”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும்.

தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா!

இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ‘அம்பேத்கரியம்’ என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போகக்கூடிய நிகழ்வல்ல.

சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

பாபாசாகேப் அம்பேத்கரை நெஞ்சிலேந்தி, இவ்விழப்பு ஒரு குடும்பத்திற்கோ, இயக்கத்திற்கோ நேர்ந்ததாகக் கருதாமல் நம் ஒவ்வொருவருக்கும், சமூகத்திற்கும் நேர்ந்த இழப்பு எனப் பறைசாற்றுவோம்.

சாதி, மதம் மற்றும் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நம்பிய தத்துவத்தின்படி வாழ்ந்த சமூக வீரர் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் செயற்பாடுகளை நினைவிலேந்தி வரும் சனிக்கிழமை 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் பேரணியில் பெருந்திரளாக அணியமாகி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம்.

வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம்.

அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம்” என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பேரணியை நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்!

உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share