தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்துள்ள அயலான் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 10) 33வது பிறந்தநாளை கொண்டாடும் ராகுல் ப்ரீத் சிங், தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுடனும் பத்திரிகையாளர்களுடனும் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். தற்போது ரகுல் ப்ரீத் சிங் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் எண்ணிக்கை: ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
