தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கடந்த 2009ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படத்தில் அறிமுகமானார். தமிழில் இவர், யுவன் படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன் பிறகு தடையற தாக்க, புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பின்னர் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தாலும், அடுத்தடுத்து வாய்ப்பு இல்லாமல் பாலிவுட் பக்கம் சென்றார்.
இதற்கிடையே தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானை திருமணம் செய்து கொண்டார் ரகுல் ப்ரீத் சிங், டயட், வொர்க் அவுட் என உடம்பை பிட்டாக வைத்து இருப்பார். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துள்ளார். அப்போது, 80 கிலோ வெயிட்டை எந்த சேப்டி பெல்டும் அணியாமல் தூக்கியுள்ளார். இதனால், முதுகு தண்டுவட பகுதி பாதிக்கப்பட்டு தற்போது படுத்த படுக்கையாகி விட்டார் இதையடுத்து, அவருக்கு பிசியோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ”நான் முட்டாள் தனமான தவறு செய்துவிட்டேன். உடற்பயிற்சியில் என்னை இன்னும் முன்னேற்றிக்கொள்ள செய்த செயல் பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடந்த 6 நாட்களாக நான் படுத் தபடுக்கையாகவே இருக்கிறேன்.
முழுவதுமாக நான் குணமடைய ஒரு வாரமோ அல்லது அதற்கு மேல் கூட ஆகும். ஒரே இடத்தில் தன்னம்பிக்கை இழந்து ஓய்வெடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இதன் மூலம் எனது வாழ்க்கையில் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக்கொண்டேன்” என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.
இந்த தகவல் அறிந்த நெட்டிசன்கள் விரைவில் அவர் குணமடைய வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ரகுல் ப்ரீத் சிங் டைரக்டர் சங்கரின் இந்தியன் 3 படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஈஷாவுக்கு எதிரான ஆட்கொணர்வு மனு: முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தை பாதிக்குமா? – வெதர்மேன் விளக்கம்!
ஓவியாவின் அந்த வீடியோவை வெளியிட்டது யார் தெரியுமா? பிடிபடும் சுள்ளான்!