சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் ரக்ஷிதா மகாலட்சுமி தனது 33 ஆவது பிறந்தநாளை நேற்று (ஏப்ரல் 23) கொண்டாடினார்.
சக சின்னத்திரை நட்சத்திரங்கள், ரசிகர் பட்டாளங்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரக்ஷிதா, ஒயின் அருந்திக் கொண்டே வெளியிட்டுள்ள இன்ஸ்டா வீடியோ இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அத்தோடு ரக்ஷிதாவின் ஆங்கில அறிவும் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவின் கேப்ஷனாக ரக்ஷிதா வெளியிட்டுள்ள வார்த்தைகள்தான் சமூக தளங்களில் பேசுபொருளாகியிருக்கின்றன.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி… என்ற தளபதி பட பாடலின் ஹம்மிங் சில்லென தொடங்குகிற நிலையில், ரக்ஷிதா கேஸ்டில் என்ற அரண்மனையின் கதவு மெல்ல திறக்கிறது.
உள்ளே ஒரு ஷோபாவில் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு ஒயின் கோப்பையை ஏந்திச் சிரிக்கிறார் ரக்ஷிதா.
அந்த வீடியோ வீட்டைச் சுற்றி வருகிறது.
நடிகைகள் பங்களா வாங்குவது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் ரக்ஷிதா இந்த வீடியோவுக்கு கொடுத்திருக்கும் குறிப்புகள் அலாதியாக இருக்கின்றன.
#Rachitha New House 🥰 pic.twitter.com/ypf6dJwW6f
— Manjari (@mazhil11) April 24, 2024
Ageing like fine wine with d wine என்ற பிரபல ஆங்கில சொற்றொடர் உலகப் புகழ் பெற்றது.
அதாவது ஒயின் எப்படி அதைத் தயாரித்து வருடங்கள் ஆக ஆக சுவை தரம் இரண்டும் கூடிக் கொண்டே போகுமோ… அதேபோல நல்ல மனம் கொண்டவர்களுக்கு வயது ஆக ஆக அவர்களின் அழகும் தரமும் கூடிக் கொண்டே போகும் என்பதுதான் இந்த ஆங்கிலச் சொற்றொடரின் அர்த்தம்.
இதைத்தான் தனது இன்ஸ்டா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் ரக்ஷிதா.
அதுமட்டுமல்ல… சொந்த வீடு குறித்த தனது பெருமிதத்தையும் பதிவு செய்துள்ளார்.
“என் பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகள் ஆசிகளுடன் ரச்சிதாவின் கேஸ்டல் க்கு வரவேற்கிறோம்
எனது சொந்த வழியில் 33 இல் அடியெடுத்து வைக்கிறேன்.
என் வீடு… நான் எதிர்கொள்ளும் புயல்களில் இருந்து எனது வசதியான தங்குமிடம். மொத்தத்தில் எனக்கு பிடித்த இடம். நான் நானாக இருக்கக்கூடிய இடம். நான் என்னை அமைதிப்படுத்தும் இடம். என் கண்ணீரை துடைத்த இடம். இங்கே முழுக்க முழுக்க பாசிட்டிவ் வைப்ஸே நிறைந்துள்ளதுள்ளது. என் தனிமையை தழுவிய இடம்.
எனக்கு 33வது ஆண்டு வாழ்த்துக்கள் மற்றும் என் வீட்டிற்கு முதல் வருட வாழ்த்துகள்.
நான் எப்பொழுதும் சொல்வது போல் சுதந்திரம் என்பது சொந்தமாக சரியானதைச் செய்வதுதான். நேர்மையுடன் வாழ்வது மிகவும் முக்கியமானது” என்று செமையாக நேரேட் செய்திருக்கும் ரக்ஷிதா,
இதற்கான ஹேஷ்டாக்குகளாக #சுயேச்சை #சுய பாதுகாப்பு என குறிப்பிட்டுள்ளார்.
ரக்ஷிதாவின் அழகுக்காக அவரை ஆராதிக்கும், ரசிகர்கள் ஒருபுறம் என்றால்… 33 ஆவது பிறந்தநாளுக்காக அவர் வெளியிட்டிருக்கும் மெசேஜால் அவருடைய ரசிகர்கள் அல்லாதவர்களும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
ஏப்ரல் 29ல் பொன்முடி வழக்கு விசாரணை : நீதிமன்றம் உத்தரவு!
அண்ணாமலை குற்றச்சாட்டு… திமுகவுக்கு வாக்களிக்காததால் பெண் கொலையா? – போலீஸ் விளக்கம்!